காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 11 July 2021 4:15 AM IST (Updated: 11 July 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது காவிரி டெல்டா பாசன பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 535 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 74.81 அடியாக இருந்தது.

Next Story