பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-விறகு அடுப்பில் பெண்கள் சமையல் செய்தனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் சிலர் விறகு அடுப்பில் சமையல் செய்தனர்.
சேலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் சிலர் விறகு அடுப்பில் சமையல் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று சேலத்திலும் அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேலம் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் விவசாய அணி மண்டல செயலாளர் ராமமோகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் பிரபு மணிகண்டன், வடக்கு மாவட்ட செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விறகு அடுப்பில் சமையல்
இதில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டிப்பது, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் பங்கேற்ற பெண்களில் சிலர் விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தாசப்பராஜ், வடமேற்கு செயலாளர் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் அனிதா சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story