பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து


பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 11 July 2021 4:16 AM IST (Updated: 11 July 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

ஊட்டி

ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் இருந்து கேரட் மூட்டைகளை ஏற்றி கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை போர்த்தியாடா கிராமத்தை சேர்ந்த கவின் (வயது 23) என்பவர் ஓட்டினார். அதில் சூரியபிரகாஷ் (22), சசிவந்த் (21), வேலுசாமி (54) ஆகியோர் இருந்தனர்.

குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்தவர்களில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் லேசான காயத்துடன் தப்பினார். 

படுகாயம் அடைந்தவர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

Next Story