சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றம்


சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 11 July 2021 4:16 AM IST (Updated: 11 July 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றம்

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சேரம்பாடி, சோலாடி, பொன்னானி ஆறுகள் உள்பட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சாலையோரங்களில் மண் சரிவு நிகழ்ந்து வருகிறது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து, மின்தடை ஏற்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று தேவாலா போலீசார் கீழ்நாடுகாணி பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் குறித்து ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கீழ்நாடுகாணி-நிலம்பூர் சாலையில் மரம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அந்த மரத்தை போலீசார் வெட்டி அகற்றினர்.

இதேபோன்று கூடலூர் தாலுகாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட கூடலூர், பந்தலூர் பகுதியில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. வணிக நிறுவனங்களில் வியாபாரமும் மந்தமாக இருக்கிறது.

Next Story