ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு: ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு: ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 July 2021 4:24 AM IST (Updated: 11 July 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் வாசுதேவன். நேற்று முன்தினம் வாசுதேவன் தரப்பினருக்கும், அதேபகுதியை சேர்ந்த முருகன், கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வாசுதேவனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று உமையாள்புரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story