கொங்கணாபுரம் வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடு, கோழிகள்


கொங்கணாபுரம் வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடு, கோழிகள்
x

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது.

எடப்பாடி:
கொரோனா பரவல் காரணமாக கொங்கணாபுரம் வாரச்சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் தளர்வுகள் வழங்கப்பட்டு, சந்தை கூட அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வாரச்சந்தை கூடியது. இதில் கொங்கணாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 15 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் வரையும், ஒரு கோழி ரூ.500 முதல் 800 வரையும் விற்பனையானது. நீண்ட நாட்களுக்கு பிறகு சனிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை கூடியதால் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் அங்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ரூ.80 லட்சம் வரை வியாபாரம் நடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story