மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் பாம்பு கடித்து தொழிலாளி சாவு + "||" + Worker killed by snake bite in Tiruvallur

திருவள்ளூரில் பாம்பு கடித்து தொழிலாளி சாவு

திருவள்ளூரில் பாம்பு கடித்து தொழிலாளி சாவு
திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் காக்களூர் பகுதியில் பேப்பர் ஏஜென்டாக உள்ளார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (32) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக ராஜாஜிபுரம், புத்துகோவில் அருகே சென்றபோது. அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதைத்தொடர்ந்து அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே சிறிது நேரத்தில் அவர் வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்து போனார்.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிலரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் தேர்தல் பகை காரணமாக அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து தடிகளால் தாக்கிக் கொண்டனர்.
3. திருவள்ளூர், கடம்பத்தூரில் இன்று மின்தடை
திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
4. திருவள்ளூர் அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் உள்ள போத்தன் தாங்கள் ஏரியின் கரைப்பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். இதனால் பொதுமக்கள் அந்த ஏரியை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
5. திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் உள்ள சுவேதா கார்டனில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.