பஸ் அதிபர் வீட்டில் பணம் திருட்டு
வந்தவாசியில் பஸ் அதிபர் வீட்டில் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசியில் பஸ் அதிபர் வீட்டில் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வருபவர் பானுகோபன், பஸ் அதிபர். இவர் குடும்பத்துடன் நேற்று வேலூர் சென்றுள்ளார்.
அந்தநேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.84 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
வழக்கமாக வீட்டு வேலைக்கு வந்த கோகிலா என்ற பெண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர் விஜயகுமார் வந்து கைரேகையை பதிவு செய்து தடயங்களை சேகரித்தார். வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story