காவலாளி பலி
லாரி மோதி காவலாளி பலி
பொங்கலூர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ராஜகுரு வயது 55 இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் தங்கி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து திருச்சி நோக்கி இளநீர் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ராஜகுரு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story