திருமணமான 7 மாதங்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 7 மாதங்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2021 5:44 PM IST (Updated: 11 July 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது32). டிரம்ஸ் இசை கலைஞரான இவருக்கும் திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜனின் மகள் திவ்யாவுக்கும் (24) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் பிரபாகரனின் அண்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது துக்க நிகழ்வுக்கு திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது குடும்பத்தினர் சமாதானம் செய்து பிரபாகரனையும் திவ்யாவையும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய கணவர் பிரபாகரன் திவ்யாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் பெற்றோர்கள் உடனடியாக நேரில் சென்று பார்த்தபோது திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராஜன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் உயிரிழந்தார் என்றும், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திவ்யாவுக்கு திருமணம் நடந்து 7 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் இறந்தாரா? என்பது குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) கீதா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story