பாசனத்திற்கு தண்ணீர்
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து இன்று திங்கட்கிழமைபாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தளி
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து இன்று திங்கட்கிழமைபாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பு
அணையில் தேவையான அளவு நீர்இருப்பு இருந்து வருவதால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு ராமகுளம் கல்லாபுரம் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் முதல்போக சாகுபடிக்கு ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று திங்கட்கிழமை முதல் நவம்பர் மாதம் 24ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக 2834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
----
Reporter : L. Radhakrishnan Location : Tirupur - Udumalaipet - Thali
Related Tags :
Next Story