கோவில்பட்டியில் விபத்தில் இளம்பெண் பலி


கோவில்பட்டியில் விபத்தில் இளம்பெண் பலி
x
தினத்தந்தி 11 July 2021 6:12 PM IST (Updated: 11 July 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடந்த விபத்தில் இளம்பெண் பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சி
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 12-வது தெருவில் குடியிருப்பவர் செல்லத் துரை (வயது 62). இவரது மனைவி சோலையம் மாள் (58). இவர்களது மகள் சித்ரா என்ற அய்யம் மாள் (32). இவர், தனது கணவர் கதிர் வேலுடன் திருப்பூரில் வசித்து வந்தார்.. கதிர்வேல் அங்குள்ள மில்லில் வேலை செய்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சித்ரா கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று கயத்தாறு அருகே தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சித்ரா, பெற்றோருடன் மொபட்டில் சென்றார்.
மொபட் மீது கார் மோதல்
நிகழ்ச்சி முடிந்ததும் 3 பேரும் மொபட்டில் ஊர் திரும்பினர். மொபட்டை செல்லத்துரை ஓட்டி வந்தார். மதியம் 2 மணியளவில் கோவில்பட்டி நாற்கர சாலையிலிருந்து மூப்பன் பட்டி விலக்கில் செல்லும் போது நெல்லையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் 3 பேரும் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பெற்றோர் கண்முன்னே பலியானார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த செல்லத் துரை, சோலையம் மாள் ஆகியோரை மீட்டு சிகிச்சை க்கு அனுப்பி வைத்தனர். 
கார் டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையை சேர்ந்த கார் டிரைவர் ராமமூர்த்தியை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story