தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கோர்ட்டு மூலம் 80 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கோர்ட்டு மூலம் 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கோர்ட்டு மூலம் 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் கோர்ட்டு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தேசிய மக்கள் கோர்ட்டு (லோக் அதாலத்) நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 2 அமர்வுகளும், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் தலா ஒரு அமர்வு வீதம் மொத்தம் 7 அமர்வுகள் நடந்தன.இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
80 வழக்குகள்
தூத்துக்குடியில் நடந்த அமர்வில் மாவட்ட முதன்மை நீதிபதி குமார் சரவணன், நிரந்தர மக்கள் கோர்ட்டு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமா மகேசுவரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வக்குமார், சார்பு நீதிபதி பிரீத்தா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமாதேவி, 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராஜகுமரேசன் மற்றும் காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசார், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 5 வங்கி வராக்கடன் வழக்கில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வழக்கும், கோர்ட்டில் நிலுவையில் உள்ள 214 வழக்குகளில் 79 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு ரூ.61 லட்சத்து 45 ஆயிரத்து 238 சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story