முககவசம் அணியாத 32 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 32 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 July 2021 8:43 PM IST (Updated: 11 July 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத 32 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 52 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 424 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 78 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 3 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 127 பேர் மீதும் என மொத்தம் 685 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.84 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முககவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 32 பேரிடம் அபராதம் வசூலிக்கப் பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்த 4 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story