சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்


ுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்
x
ுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்
தினத்தந்தி 11 July 2021 8:45 PM IST (Updated: 11 July 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகேமேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொஞ்சும்மலைப் பகுதியான  வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இங்கு, மொத்தம் உள்ள 6 வனச்சரகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வன சரகங்களில் அரிய வகை வன விலங்குகளான வரையாடு, சிங்கவால் குரங்குகள், மான் மற்றும்அரியவகை பறவைகள் அதிகம் காணப்படுகின்றது. 

இதுதவிர, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் வால்பாறைக்கு செல்பவர்களை வரவேற்கும் விதமாக பகல் நேரத்திலேயே தேயிலைகாட்டில் முகாமிடுகின்றன. 

தற்போது,கொரோனா 2 -வது அலையில் ஊரடங்கு பெருமளவு தளர்வுகாரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகளில் வரையாடுகள், புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.

சுற்றுலா செல்வோர் வாகனங்களில் வேகமாக செல்லும்போது விபத்தில் சிக்கி அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது.


இதுகுறித்து பொள்ளாச்சி வனத்துறை அதிகரிகள் கூறியதாவது:-


வால்பாறையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருவதால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வனப்பகுதியில் போதியஅளவு கிடைக்கின்றன. 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் வரையாடு, சிங்கவால் குரங்குகள் போன்ற அரிய வகை வன விலங்குகள் ரோட்டில் சுற்றி வருகின்றன. 

எனவே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனவிலங்களுக்கு உணவு வழங்க கூடாது. 

அதேபோல், புலிகள் காப்பகத்தின் எந்த ஒரு பகுதியிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி திறந்தவெளியில் உணவு சமைக்க கூடாது.மீறினால் அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story