பெண் சாவு
காங்கேயத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
காங்கேயம்
காங்கேயத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது
கர்ப்பிணி
மடத்துக்குளம் அருகே உள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி சொப்பனப்பிரியா வயது 32. இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சொப்பனப்பிரியா 2வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து தனது பெற்றோர் செல்வராஜின் ஊரான காங்கேயம் வந்து பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை வழக்கமான பரிசோதனைகள் முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். பிரசவ வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், அப்படி வந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும் என்றும் அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் சொப்பனப்பிரியாவுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பிரசவ வலி எடுத்து பனிக்குடம் உடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக செல்வராஜூம், அவரது மனைவியும் சேர்ந்து மகள் சொப்பனப்பிரியாவை கார் மூலம் கொண்டு சென்று உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த சொப்பனப்பிரியா நேற்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். எனவே சொப்பனப்பிரியாவின் மரணம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கேயம் போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
----
Related Tags :
Next Story