சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுவர்கள்


சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுவர்கள்
x
தினத்தந்தி 11 July 2021 9:08 PM IST (Updated: 11 July 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பழைய பஸ் நிைலயத்தில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிைலயத்தில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அதன் ஒருபகுதியாக மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 100 மணி நேரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக இன்னிசை கச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் அதனை முன்எச்சரிக்கையாக கையாளுவது, தொற்று பாதித்தால் சிகிச்சை பெறுவது குறித்து பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

கலை நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக இன்று காலை சிறுவர்-சிறுமிகள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றியும், பரதநாட்டியத்தின் மூலமும் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் இதனை கண்டு ரசித்தனர். அப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்து பெட்டகம், முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Next Story