கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது


கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2021 10:03 PM IST (Updated: 11 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி  : 

தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் கம்பம் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில், அவர்கள் கோம்பை சாலை தெருவை சேர்ந்த சரவணன் (30), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாந்தி (38), மேகமலையை சேர்ந்த சந்திரன் (34), திருப்பூரை சேர்ந்த முகமது அலி (28) ஆகியோரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.   அவர்களிடம்   இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story