ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 11 July 2021 10:25 PM IST (Updated: 11 July 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை - மங்களூரு விரைவு ரெயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த 3 பேரை வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

சென்னை - மங்களூரு விரைவு ரெயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த 3 பேரை வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் கஞ்சா கடத்தல்

சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை-மங்களூரு விரைவு ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

 ரெயில்வே பாதுகாப்புப்படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புசெழியன் மற்றும் போலீசார் ஒவ்வொரு பெட்டிகளாக ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். 

அப்போது ஒரு பெட்டியில் பயணித்த 3 பேரின் பைகளில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

அவர்கள் 3 பேரிடமும் போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். 

அதில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 53), முகமது அனீஷ்ஷமி (21), முபாரக் (31) என்பதும், சென்னையில் இருந்து கஞ்சா வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?, சென்னையில் யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார்கள். 3 பேரும் இதற்கு முன்பு இதுபோன்று கஞ்சா கடத்தி சென்று உள்ளார்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story