திருமயம் அருகே பசுமாட்டிற்கு வளைகாப்பு
திருமயம் அருகே பசுமாட்டிற்கு வளைகாப்பு நடைபெற்றது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மூங்கிதாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு 4 காளை கன்றுகளை ஈன்று உள்ளது. பின்னர் 5-வதாக பசுங்கன்றையும் ஈன்று உள்ளது. அந்த பசுங்கன்றை அண்ணாமலை குடும்பத்தார் பெண் பிள்ளை போல் வளர்த்து அதற்கு ஐஸ்வர்யா என பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். ஐஸ்வர்யா என்ற அந்த பசுமாடு தற்போது 9 மாத சினை மாடாக இருந்தது. இதையடுத்து அண்ணாமலை குடும்பத்தார் அதற்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டனர். தொடர்ந்து நேற்று இந்து முறைப்படி கோவிலில் வைத்து பசுமாட்டிற்கு அலங்காரம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பட்டுத்துண்டு கட்டினர். பின்னர் பெண்கள் வளையல்களை பசுமாட்டின் கொம்பில் மாட்டி நலுங்கு வைத்து வளைகாப்பு செய்து வைத்தனர். இதில் உறவினர்கள், கிராம மக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வித்தியாசமாக நடந்த இந்த வாளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க அருகே உள்ள கிராமத்தில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story