ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு


ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 11 July 2021 10:44 PM IST (Updated: 11 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகைகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

25 பவுன் நகைகள் திருட்டு

காரைக்குடி அருகே குன்றக்குடி போலீஸ் சரகம் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் டெல்லியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
 2 நாட்களுக்கு முன்பு ரேணுகா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சொந்த ஊரான சிறுவயல் சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளேயிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு வீடெங்கும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருக்கிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செத்தில்குமார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி சிறிது தூரத்தில் சென்று நின்றது. நகை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story