குன்னூரில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
குன்னூரில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
ஊட்டி
குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அரசு பஸ் திடீரென பழுதடைந்து சாலையின் நடுவே நின்றது.
இதனால் எதிரே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி பஸ்சை பின்னோக்கி தள்ளினர். இதையடுத்து அந்த பஸ் இயங்கியது.
இதன் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.
மலைப்பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்களை சிறந்த முறையில் பழுதுபார்த்து நல்ல முறையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story