குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் விழா


குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 11 July 2021 11:11 PM IST (Updated: 11 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 97-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அடிகளார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் யூனியன் தலைவர்கள் சொர்ணம்அசோகன் (கல்லல்), சண்முகவடிவேல் (திருப்பத்தூர்), சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், திருப்பத்தூர் தாசில்தார் ஜெயந்தி,குன்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலுமங்கை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-----------


Next Story