பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூரில் நேற்று மாவட்ட பா.ஜ.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். பொது செயலாளர் மோகன் வரவேற்று பேசினார். மாநில இணை செயலாளர் சிவசுப்பிரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், மத்திய மந்திரியாக எல்.முருகனையும், பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையையும் நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் தினமும் 10, 15 முறை ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும், காவிரியில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிக்கு தேவையான மணலை மாட்டு வண்டி மூலம் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி கொடுக்க வேண்டும். கரூர், குளித்தலையில் பஸ் நிலைய இடமாற்ற பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செந்தில்நாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story