மேலும் 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு வந்தது
குமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது.
தடுப்பூசி முகாம்கள்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ள முகாம்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.
இதனை தவிர்க்க ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு முறை வந்தது. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதால், சா்வர் பிரச்சினை அடிக்கடி எழுகிறது. சில முகாம்களில் நேரடியாகவும் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 556 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் கோவிஷீல்டு 3 லட்சத்து 51 ஆயிரத்து 932 பேருக்கும், கோவேக்சின் 46 ஆயிரத்து 629 பேருக்கும் போடப்பட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி குமரியில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது. பின்னர் தடுப்பூசி டோஸ்கள் குமரிக்கு வரவில்லை. இதனால் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறவில்லை.
11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு
இந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்று காலை மதுரை மாவட்டத்துக்கு கோவிஷீல்டு மருந்துகள் கொண்டுவரப்பட்டன. இதில் குமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குமரி மாவட்டத்துக்கு எடுத்துவரப்பட்டது.
நேற்று தடுப்பூசி மருந்துகள் வந்ததை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story