திருச்சி அரியமங்கலத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


திருச்சி அரியமங்கலத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2021 1:03 AM IST (Updated: 12 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. எதிரில் உள்ள திருமகள் தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து போலீசாரோடு ஒவ்வொரு இடமாகச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு மாவு அரவை நிலையத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 

போலீசார் வருவதை அறிந்த அரவை நிலையத்தின் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மேலும் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story