மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை


மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 1:58 AM IST (Updated: 12 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை

கோவை வேலாண்டிபாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவரது 3 வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். 

இதனால் மனவேதனையில் இருந்து வந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story