சாலை மறியல்
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டில் சுந்தரி ராஜா தெரு, ராமசாமி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் சரியாக வராததால் அப்பகுதி மக்கள் தென்காசி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் மற்றும் நகராட்சி தண்ணீர் திறப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் தண்ணீரை நிறுத்தியதாகவும் மேலும் தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story