மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பொதுமக்கள் அச்சம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை- புதுச்சேரி
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக ஞாயிற்றுக்கிழமைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன.கடந்த 6 மாதங்களுக்கு முன் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற 80 பந்தய மோட்டார் சைக்கிள்களை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனை சாவடியில் மாமல்லபுரம்
துணை கோட்ட போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.அதன் பிறகு சில மாதங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பற்தயம் செல்வது குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழையபடி கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தலை தூக்கியுள்ளது. அதிவேகத்தில் செல்லும் பந்தய மோட்டார் சைக்கிள்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடநெம்மேலி பகுதியில் ஷேர் ஆட்டோ மீது அதிக திறன் கொண்ட பந்தய மோட்டார்சைக்கிள் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் கல்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது பந்தய மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபோல் ஏராளமான சாலை விபத்துகள் பந்தய மோட்டார் சைக்கிள்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் பந்தய மோட்டார் சைக்கிள்கள் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
கிழக்கு கடற்கரை சாலை
பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்புடையதாகும். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு அரசின் சார்பில் அனுமதி இல்லை. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றியே மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறுகின்றன.
நேற்று ஏராளமான பந்தய மோட்டார் சைக்கிள்கள் மாமல்லபுரம் வழியாக அதிவேகத்தில், அதிக ஒலி எழுப்பி புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தன. மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story