தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் விஷம குரலை அடக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்


தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் விஷம குரலை அடக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 July 2021 6:24 PM IST (Updated: 12 July 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் விஷம குரலை அடக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும்" என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொங்குநாடு என்ற புதிய வார்த்தைப் பிரயோகத்தை பா.ஜ.க. கையில் எடுத்திருப்பதன் பின்னணியில் பிரித்தாளும் சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story