உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு


உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 July 2021 7:41 PM IST (Updated: 12 July 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ரதம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. 

இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

பின்னர், குடும்பநல விழிப்புணர்வு ரத பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ரதம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 


நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மக்கள் பலரும் கலந்துகொண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்றனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story