250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்


250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 12 July 2021 9:54 PM IST (Updated: 12 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். 
தடுப்பூசி போட ஆர்வம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிகரித்து வந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 22 பேருக்கு மட்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின் அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் அரசு மருத்துவமனை, அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி  பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
250 பேருக்கு மட்டுமே டோக்கன்
இந்தநிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக நேற்று மயிலாடுதுறை நகரில் ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் மட்டுமே தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 7 மணி முதலே 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஆனால் 250 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து டோக்கன் வழங்கப்பட்ட 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில் அதிகாலையில் இருந்து தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Next Story