நாமக்கல் மாவட்டத்தில், மேலும் 80 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில், மேலும் 80 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 12 July 2021 10:01 PM IST (Updated: 12 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 976 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,975 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 55 ஆக அதிகரித்து உள்ளது.
823 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 87 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 44 ஆயிரத்து 798 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 434 பேர் பலியான நிலையில் 823 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
=======

Next Story