2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்


2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 July 2021 10:10 PM IST (Updated: 12 July 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக புதுவயல், கானாடுகாத்தான் துணை மின்நிலைய பகுதிகளில் 2 நாட்கள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

காரைக்குடி,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காரைக்குடி உப கோட்டத்திற்குட்பட்ட புதுவயல் மற்றும் கானாடுகாத்தான் துணை மின் நிலையங்களின் வழியாக செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.அதனால் நாளை(புதன்கிழமை) அன்று கானாடுகாத்தான் பிரிவில் கானாடுகாத்தான், நெற்புகப்பட்டி. ஆத்தங்குடி, நேமத்தான்பட்டி, உ.சிறுவயல், பலவான்குடி, ஆவுடைப் பொய்கை ஆகிய பகுதிகளிலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) புதுவயல் பிரிவில் மித்ராவயல், நென்மேனி, பெரிய கொட்டகுடி, ஆம்பக்குடி, இலுப்பக்குடி, மாத்தூர் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.



Next Story