கடலில் தவறி விழுந்து சிறுவன் சாவு
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சிறுவன்
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் மாதவன் (வயது 4). இந்த சிறுவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு சிறுவனை காணவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வடபாகம் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சங்குகுளி காலனி கடற்கரை அருகே மழைநீர் செல்லும் பாலத்தில் தேங்கி கிடந்த கடல்நீரில் சிறுவன் உடல் ஒதுங்கி கிடந்தது.
சாவு
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘சிறுவன் கடலில் தவறி விழுந்து இறந்தது’ தெரியவந்தது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story