காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். நகர் தலைவர் கோபி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் மாவட்ட பொறுப்பாளர் பினுலால் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக வாபஸ்பெறக்கோரியும் கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சாயல்குடி வேலுச்சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோபால், துல்கிப், வட்டார தலைவர் காருகுடி சேகர், மாவட்ட பொது செயலா ளர்கள் மணிகண்டன், மோதிலால் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தவறான நிர்வாக கொள்கையினால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து 3 சக்கர வாகனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து சூடம் காண்பித்து கோஷமிட்டு சைக்கிள் பேரணி நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்புல்லாணியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சேது பாண்டியன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் முத்து கிருஷ்ணன், முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story