தி.மு.க.வில் இணைந்த 9 ஊராட்சி தலைவர்கள்
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள 9 ஊராட்சி தலைவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், அ.ம.மு.க. ஒன்றிய இணைச் செயலாளர் ஜெயக்குமார், ராஜகோபாலன்பட்டி, பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், ராஜக்காபட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, கதிர் நரசிங்க புரம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் ராமசாமி, கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story