காங்கிரசார் சைக்கிள் பேரணி; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு


காங்கிரசார் சைக்கிள் பேரணி; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 12 July 2021 10:27 PM IST (Updated: 12 July 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

ஸ்ரீவைகுண்டம்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் சைக்கிள் பேரணி நடந்தது. ஸ்ரீவைகுண்டம்- தூத்துக்குடி சாலையில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சைக்கிளை ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி மேடை பிள்ளையார் கோவில், பழைய தாலுகா அலுவலகம் வழியாக ஸ்ரீவைகுண்டம் புதுபாலம், புதுக்குடியில் இருந்து மீீண்டும் பழைய பாலத்தின் வழியாக சென்று தேவர் சிலை, பஸ் நிலையம், பெருமாள் கோவில், அரசு போக்குவரத்து பணிமனை, வ.உ.சி. திடலில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story