உத்தனப்பள்ளி அருகே நிலத்தகராறில் விவசாயி உள்பட 2 பேருக்கு வெட்டு
உத்தனப்பள்ளி அருகே நிலத்தகராறில் விவசாயி உள்பட 2 பேர் கத்தியால் வெட்டப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
விவசாயி
உத்தனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணம்மாகொத்தூரை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 58). விவசாயி. இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் 2½ ஏக்கர் நிலம் வாங்கினார். அதே பகுதியை சேர்ந்த அன்னையப்பா (68) தரப்பினர் அந்த நிலத்தின் மீது உரிமை கோரி வந்தனர். மேலும் அவர்கள் பசவராஜிடம் நிலம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நிலத்தின் வழியாக சென்ற பசவராஜிடம், அன்னையப்பா, இவருடைய மனைவி வெங்கடலட்சுமி (58), மகன் சுரேஷ்பாபு (36) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கத்தியால் பசவராஜை வெட்டினர். இதனை தடுக்க வந்த அவரது உறவினரான சசிதரன் (26) என்பவருக்கும் வெட்டு விழுந்தது.
3 பேர் கைது
இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த பசவராஜ், சசிதரன் ஆகியோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பசவராஜ் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அன்னையப்பா, வெங்கடலட்சுமி, சுரேஷ் பாபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story