பல்லடம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பல்லடம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 10:39 PM IST (Updated: 12 July 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம், 
பல்லடம் அருகே உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் கதிரவன்(வயது 19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டதால் உதவி டிரைவராக வேலைக்கு சென்று வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு தந்தையுடன் மாணவர் சென்றிருந்தார். அப்போது கதிரவனை அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. 
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனம் உடைந்த கதிரவன் உடனே வீட்டிற்கு  திரும்பி வந்து வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் வீட்டில் கதிரவன் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story