ஆயுதத்துடன் வாலிபர் கைது


ஆயுதத்துடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 July 2021 10:41 PM IST (Updated: 12 July 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஆயுதத்துடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் அர்ஜீன் (வயது27). இவர் மீது தலா 2 கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கேணிக்கரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அம்மன்கோவில் பகுதியில் அர்ஜூன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த அர்ஜூனை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய சோதனையில் நீண்ட வாள்கத்தி இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அதனை பறிமுதல் செய்து அர்ஜூனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதோடு போலீசார் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story