வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி

புதுக்கோட்டை, ஜூலை.13-
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் நேற்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் புகார் மனு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
முக்கண்ணாமலைப்பட்டியில் பெண் ஒருவர் எங்கள் பகுதியில் உள்ள பெண்களிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறினார். எங்களிடம் வங்கிகளில் கடன் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து மட்டும் வாங்கி கொண்டு அந்த தொகையை அவரே எடுத்துக்கொண்டார். அதற்கு கமிஷனாக ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டு மீதித்தொகையை எடுத்து கொண்டார். மேலும் கடன் தவணை தொகையை அவரே செலுத்துவதாக கூறினார். இதுபோல பல பெண்களிடம் கூறி பணத்தை மோசடி செய்துவிட்டார். மேலும் அவர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
ரூ.45 லட்சம் மோசடி
வங்கிகளில் கடன் வாங்கியது எங்களது பெயரில் இருப்பதால் தவணை தொகையை செலுத்த கோரி வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். கடன் வாங்கி கொடுத்த பெண் வீட்டை பூட்டி விட்டு திருச்சி கே.கே.நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்று இது குறித்து கேட்ட போது அவர் செலுத்த முடியாது என மிரட்டுகிறார். அவருக்கு உடந்தையாக குடும்பத்தினரும் உள்ளனர். எங்களிடம் இருந்து ரூ.45 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இதே கோரிக்கையை மனுவாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எழுதி கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக கூறினர்.

Related Tags :
Next Story