பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எஸ். கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் மகன் கோகுல் (வயது 24). இவர் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தபோது, அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இளம்பெண் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு கோகுலிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். கோகுல் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூற அதற்கு கோகுலின் தந்தை திருக்குமரன், (50), தாய் செல்வி (50) ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்தால் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். கோகுலின் நண்பர்கள் எஸ்.கோடியூரை சேர்ந்த பூபாலன், அரவிந்தன், பாலா ஆகிய 3 பேரும் சேர்ந்து என்ஜினீயரை மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் விசாரணை நடத்தி கோகுல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story