மானாமதுரை,
பெட்ரோல், டீசல் விலை உயர்ைவ கண்டித்து பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை பஸ் நிைலயத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மினிபஸ்சை கயிறு கட்டி காங்கிரசார் இழுத்தனர். இதில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் டாக்டர் செல்வராஜ், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சஞ்சய் காந்தி நகர் தலைவர் கணேசன், வட்டார தலைவர் கரு.கனேசன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டு ெபட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.