போலி சான்றிதழ் வழங்கிய 4 பேர் மீது வழக்கு


போலி சான்றிதழ் வழங்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 July 2021 11:30 PM IST (Updated: 12 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மின் இணைப்பு பெற போலி சான்றிதழ் வழங்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி பெரியார் சிலை அருகே சூப்பர் மார்க்கெட் நடத்துவதற்கான வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் கட்டிட பணிகள் நிறைவு பெற்றதாக நகராட்சி அளித்த சான்றிதழை போல் போலியாக தயார் செய்து அதில் நகரமைப்பு ஆய்வாளர் போல கையெழுத்திட்டு நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) காரைக்குடி நகராட்சி என கையால் எழுதி, காரைக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். மின்சார வாரிய அதிகாரிகள் சான்றிதழை சரிபார்ப்பதற்காக அதனை நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர். அங்கே நகராட்சி அதிகாரிகள் அதனை பார்வையிட்ட போது அது போலி என தெரியவந்தது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வணிக வளாகத்தின் உரிமையாளர்கள் பெவின், மோகன், ஜெகன், செலின் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story