பெட்ரோல், டீசல் விலை உயரவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தம்
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் வீராங்கன், ஜோதி கணேசன், லோகிதாஸ், ஜார்ஜ், ரங்கநாதன், யுவராஜ், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் விஜயேந்திரன் வரவேற்றார்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆடிட்டர் கிருபானந்தன் சிறப்புரை ஆற்றினார். சைக்கிள் ஊர்வலத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். எம்.தேவராஜ், மாவட்ட நிர்வாகி பர்வேஸ்நயீம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சைக்கிள் ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அங்கேயே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜய்பாபு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story