காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கரூர்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து கரூர் மனோகரா கார்னரில் இருந்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, 50 சதவீதம் குறைவாக விற்கும்போது, மத்திய அரசு ரூ.36 கலால் வரி விதித்து, பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு பெட்ரோல், டீசலில் மட்டும் ரூ.20 லட்சம் கோடி கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்றார். இதேகோரிக்கையை வலியுறுத்தி தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தம் அருகே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கிருஷ்ணராயபுரத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story