புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 11:54 PM IST (Updated: 12 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் திருமணமான 4-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை

கோவையில் திருமணமான 4-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

டிரைவர்

கோவை சிங்காநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

பின்னர் கடந்த 7-ந் தேதி 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று  கணேசனின் மனைவி சோகத்தில் அழுதுகொண்டே இருந்தார். அவரிடம் எதற்காக அழுகிறாய் என்று கணேசன் கேட்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது தன்னை ஏற்கனவே வாலிபர் ஒருவர் காதலித்ததாகவும், எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் அவர் விஷம் குடிப்பதுபோன்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இருப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், தான் காதலித்து திருமணம் செய்த பெண்ணை வேறு ஒருவரும் காதலித்து உள்ளாரா என்று கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தார். பின்னர் வாழ்க்கை யில் வெறுப்படைந்த கணேசன், தனது மனைவியை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் திருமணமான 4-வது நாளிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story