கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
செஞ்சி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் சந்தோஷ் (வயது 14). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சென்றான்.
அப்போது படியில் இறங்கியபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தான். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவன் நீரில் மூழ்கினான். அவனை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story