30 பேருக்கு கொரோனா


30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 July 2021 1:14 AM IST (Updated: 13 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 30 கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45,112 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,050 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாக வில்லை. 
நேற்று மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 30 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story